tamilnadu

img

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற கர்ப்பிணி!

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நீடிக்கும் அடக்குமுறைகள் காரணமாக, கர்ப்பிணி ஒருவர் 6 கி.மீ. தூரம் நடந்தே மருத்துவமனைக்குச் சென்று, குழந்தை பெற்றநிகழ்வு அரங்கேறியுள்ளது.இதுதொடர்பாக தனியார் செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இன்ஷாஅஷ்ரப் என்ற 26 வயது கர்ப்பிணிக்கு, அதிகாலை 5.30 மணியளவில்பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இன்ஷாவின் வீட்டில் அவருடைய தாயாரும், சகோதரியும் மட்டும் இருந்துள்ளனர். அவர்கள் இன்ஷாவை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆட்டோ ஒன்றை அழைத்து, அதில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளனர்.

ஆனால், புறப்பட்டு அரை கிலோமீட்டர் கூட தாண்டாத நிலையில், அங்கிருந்த ராணுவத்தினர் ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி மறுத்துள் ளனர். இன்ஷா குடும்பத்தினர் தங்களது நிலைமையை எவ்வளவோஎடுத்துக் கூறியும், அதற்கு செவி சாய்க்காத ராணுவத்தினர், வேண்டுமென்றால் மருத்துவமனைக்கு நடந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். இன்ஷாவும், அவரது தாயாரும் வேறு வழியின்றி நடக்கத் தொடங்கியுள்ளனர். அப்போதும்கூட, ஒவ்வொரு500 மீட்டருக்கும் ஒருமுறை அங்கிருந்தராணுவத்தினர் அவர்களை சோதனையிட்டுள்ளனர். மேலும், வேறுவேறுதிசைகளை காட்டி மாற்றுவழியில்செல்லுமாறு கூறி, அலைக்கழித்துள்ளனர். இவ்வாறு இன்ஷா 6 கிலோ மீட்டர்பிரசவ வலியுடன் நடந்தே சென்றுள்ளார். காலையில் நடக்க ஆரம்பித்தவர்கள், பிற்பகலைத் தாண்டியும் நடந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பிரசவ வலி தாங்க முடியாத இன்ஷாரோட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனிடையே தகவலறிந்த தனியார் மருத்துவமனை ஊழியர்களே, சம்பவ இடத்திற்கு வந்து, இன்ஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

;